இலண்டன் தமிழ்ச் சங்கம் · Est. 1936 · Reg. 1960
Our language. Our culture. Our future.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.Tamil roots, British wings
இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இலண்டன் தமிழ்ச் சங்கம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) நீண்ட வரலாறும் பெருமைமிகு பாரம்பரியமும் கொண்ட தொன்மையான சங்கமாகும். இச்சங்கம் 1936ம் ஆண்டு Dr. R.K. சண்முகம் செட்டியார், இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் அவர்கள் மற்றும் திரு. K.T.K. தங்கமணி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இலண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு வந்தபோது, இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகள் அவர்கள் வருகை புரிந்த பெருமைக்குரியது. 1960ம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கத்தில் நிறுவனமாகவும், சேவை மையமாகவும் பதிவு பெற்றது.
1936
Founded in London
1960
Registered
90+
Years of service
எங்களுக்கு உறுதுணையாக இருந்து இத்தனை ஆண்டுகளாய் பல நிகழ்ச்சிகள் நடத்த உதவி வரும் இலண்டன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இலண்டன் வாழ் தமிழ் உறவுகளுக்கும், தமிழ் பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.Venue hire
Host your event at the Sangam hall
A welcoming hall in the heart of Manor Park, available to hire for celebrations, gatherings and classes.

